சினிமா செய்திகள்
நடிகர் சூர்யாவின் 42-வது பட டைட்டில் வெளியீடு
சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் 42-வது பட டைட்டில் வெளியீடு

தினத்தந்தி
|
16 April 2023 9:55 AM IST

சூர்யா-42 படத்தின் பெயரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சென்னை,

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 42-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடிகை தீஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யா இதுவரை நடிக்காத தோற்றத்தில் நடித்து வருவதாகவும், அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் 10 மொழிகளில் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு வீர், அக்னீஸ்வரன் ஆகிய பெயர்களை பரிசீலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் படத்தின் பெயரை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு 'கங்குவா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 2024-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 1984-ல் நடித்த இந்தி படத்தின் பெயர் 'கங்குவா' என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்